Seeman Emotional Speech against BJP
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைத்துவிடுவார் என்ற பயத்தில், பாஜக ரஜினியை அரசியலில் களம் இறங்க செய்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
இதுதொடர்பாக சீமான், திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, தமிழகத்தில் தற்போது சரியான ஆட்சி நடக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள், பொது தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் அதிமுக ஆட்சி கலைய நேரிடும்.
அதிமுகவில் பல அணிகள் உருவாகிவிட்டன. இதனால், அந்த கட்சிக்கு யார் தலைமை ஏற்பது என தெரியாமல் இருக்கிறது. இந்த நேரத்தில், தேர்தல் வந்தால், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதை வைத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.

ஏற்கனவே தமிழகத்தில் காலூன்ற முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக ரஜினியை, அரசியல் களத்தில் இறக்கப்பார்க்கிறது. ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.

தமிழகம் முன்னுக்கு வரக்கூடாது என்பதே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் எண்ணம். இதனால், தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரக் கூடாது என்பதற்காக தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு இருக்காது என்றார்.
