‘வீரமங்கை வேலு நாச்சியார்’ என்று ஜெயலலிதாவை புகழவும் செய்தார். அதன் பின் அதே ஜெ.,வுக்கு எதிராக விமர்சன வாள் வீச துவங்கினார்.இவரு எப்போ ஆதரவா இருக்காரு, எப்போ கட்டையை உருவாருன்னே தெரியலையேடா! என்று அ.தி.மு.க.வினர் நொந்து நூடுல்ஸாவது வழக்கம். அதன் பின் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் மிக முழுவதுமாகவே அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்ய துவங்கியுள்ளார் சீமான். 

தி.மு.க.வை நூறு சதவீதம் டேமேஜ் செய்து அரசியல் பண்ணும் சீமான், அ.தி.மு.க.வை எழுபது சதவீதமாவது எகிறி அடிக்காமல் இருப்பதில்லை. அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேனி பக்கம் பிரசாரத்துக்கு சென்றவர், பன்னீரை  வெளுத்தெடுத்து விமர்சனம் பண்ணிட துவங்கினார். அதை இப்போது வரை அவர் நிறுத்திடவில்லை என்பதுதான் ஹைலைட்டே. 

சீமான் தமிழின் பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில்தான் இந்த தடவை ‘வாக்குக்கு பணம் கொடுக்கும் ஊழல் அரசியல்’ பற்றி பேசியிருப்பவர், பன்னீர்செல்வத்தையும் பதம் பார்த்திருக்கிறார். 
அதில் சீமான் சொல்லியிருப்பது இதுதான்....”இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் பண இறைப்பு குறைவு. மற்ற மாநிலங்களின் தேர்தல் வெற்றியை பணம்தான் முழுக்க முழுக்க தீர்மானிக்கிறது. தமிழகம் முழுவதும் பா.ஜ.வுக்கு எதிரான அலையடித்த நிலையில், பா.ஜ.வின் அடிவருடியாகவே மாறிவிட்ட ஐயா ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனியில் எப்படி வெல்கிறார்? 

மக்களின் ஒருமித்த அலை போன்ற எண்ணத்தையே மாற்றுகின்ற அளவுக்குப் பணம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது தேனி தொகுதியில். 
வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, பணப்பரிவர்த்தனைகளைச் சிறப்பாக செய்தால் நிச்சயம் வெல்லலாம் என்பதற்கு உதாரணம்தான் ரவீந்திரநாத்தின் வெற்றியும், டி.டி.வி.தினகரனின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியும். 

பணத்தை தவிர்த்து இவர்களின் வெற்றிக்கு வேறென்ன காரணத்தைச் சொல்லிவிட முடியும்?” என்று சூடாக குறிப்பிட்டுள்ளார். 
இதற்கு ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத், தினகரனின் பதில் என்னவோ!