Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் சீமான்... அதிமுக விட்டாலும் நாம் தமிழர் விடாது போல... பீதியில் வெலவெலத்த தளபதி.

திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர், தானும் அதையே நினைக்கிறேன் என்றார். அதாவது சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக கூறியுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Seeman contest against Stalin ... Even if AIADMK leaves, we will not give Nam Tamil ... thlapathy in panic .. !!
Author
Chennai, First Published Nov 18, 2020, 3:24 PM IST

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு  ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்களை அமைத்து யார் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என திட்டமிட்டு அதற்கான அரசியல் காய் நகர்த்தல்களில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

Seeman contest against Stalin ... Even if AIADMK leaves, we will not give Nam Tamil ... thlapathy in panic .. !!

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் வழக்கம்போல அதிமுக- திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே நேரடி போட்டி இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சியி வழக்கம்போல தனித்தே தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதமே சீமான் அறிவித்திருந்தார். அதேபோல் ஆண் வேட்பாளருக்கு இணையாக பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கப் போவதாகவும் கூறி அதிரடி காட்டிவருகிறார். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர்  வ.உ சிதம்பரம் பிள்ளையின் 84 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Seeman contest against Stalin ... Even if AIADMK leaves, we will not give Nam Tamil ... thlapathy in panic .. !!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேலை யாத்திரை மூலமாக நாம் தமிழர் கட்சிக்கே அதிக விளம்பரம் கிடைத்துள்ளது, பாஜகவுக்கு அல்ல என்றார். கடந்த 10 ஆண்டுகளாக தான் பேசி வரும் கொள்கைகளையே தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நாம்தமிழர்கட்சி தயாராகி வருவதாக கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர், தானும் அதையே நினைக்கிறேன் என்றார். அதாவது சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக கூறியுள்ளது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Seeman contest against Stalin ... Even if AIADMK leaves, we will not give Nam Tamil ... thlapathy in panic .. !!

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார், அதேபோல் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தை கைப்பற்றிய நாம் தமிழர் கட்சியி, நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்களையும் கைப்பற்றியதுடன், 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதிவிகளையும் கைப்பற்றியுள்ளது. நாளுக்குநாள் மக்கள் மத்தியில் அக்காட்சி வலுப்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை குறிவைத்து அவர் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios