தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு.. வாழ்த்து தெரிவித்த சீமான் !!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு அவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் சீமான்.

Seeman congratulated BJP national committee member kushboo

இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலன் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அமைப்பு ஆகும்.  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அனைவருக்கும் குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி” தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.

Seeman congratulated BJP national committee member kushboo

நடிகை குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதேபோல பலரும் நடிகை குஷ்புவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை குஷ்புவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

Seeman congratulated BJP national committee member kushboo

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு அவர்களுக்கு வாழ்த்துகள்.  எதையும் நேர்த்தியாகத் திறம்படச் செய்வீர்கள் என்பதை அறிவேன். அதைப் போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று சீமான் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios