Asianet News TamilAsianet News Tamil

தன்னை சந்திக்க வந்தவர்களை நிற்க வைத்தும்,அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டும் பேசுவதுதான் சமத்துவமா.?சீமான்

மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்

Seeman condemned Minister MRK for not giving due respect to those who came to meet him
Author
First Published Jul 3, 2023, 11:40 AM IST

மாமன்னன்- சமூகநீதி

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மாமன்னன், இந்த திரைப்படத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை வழங்குவது தான். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் நாற்காலியில் அமர விடாமல் நிற்க வைப்பது   எதிர்ப்பவராக உதயநிதி இருப்பார். ஆனால் தனது கட்சியில் உள்ள அமைச்சர் எம்ஆர்கே செல்வம் தன்னை சந்திக்க வந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை நிற்கவைத்தும் தான் நாற்காலியில் அமரந்து பேசும் வகையிலான புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Seeman condemned Minister MRK for not giving due respect to those who came to meet him

நிற்க வைத்து பேசிய அமைச்சர்

சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா? இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது?

இஸ்லாமியர்களை உட்கார வைக்ககூட மனமில்லையா.?

இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாயாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சம்மாக உட்கார வைக்கக்கூட மனமில்லையா? "கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு".

Seeman condemned Minister MRK for not giving due respect to those who came to meet him

இது தான் சுயமரியாதையா.?

மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆர்.என்.ரவிக்கு பாஜக அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் -மு.க.ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios