அரசியலில் நான் உங்களை விட 8 ஆண்டுகள் சீனியர். ஆகையால் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு இமயமலைக்கு போய்விடுங்கள் என ரஜினிகாந்தை வம்பிற்கு இழுத்துள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சமீபகாலமாக மைக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை திட்டித் தீர்த்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பரமக்குடியில் நடைபெற்ற அவரது கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் மீண்டும் ரஜினியை குறிவைத்து தாக்கியுள்ளார்.

 

’’ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என கூறியுள்ளார். அவர் என்னைத்தான் சொன்னார்னு எனக்கு நல்லாவே தெரியும் தெரியும். அதிபயங்கரவாதிகள் நாட்டை ஆளும்போது மக்கள் எல்லாம் தீவிரவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும்தான் இருப்பாங்க. சினிமாவில் நீங்கள் வேணா பெரிய ஆளாக இருக்கலாம்.

ஆனா அரசியலில் நான் 8 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் உங்களுக்கு சீனியர். நாற்காலி உங்கள் மன்ற பஞ்சாயத்தையே உங்களால் தீர்க்க முடியல. ஆகையால ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு இமயமலைக்கு போய்விடுங்கள். ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்தால் பரவாயில்லை. அவர் உட்கார்ந்துவிட்டு எழுந்து போன நாற்காலியில் போய் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் இதை பார்க்கும் உலக மக்கள் என்ன நினைப்பார்கள். மலையாளிகளை பாருங்கள். அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்’’ என சராமரியாக வசை பாடினார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.