9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்களுக்கு ஆதரவாக சென்னைத் தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று  முதல் தமிழக நீதிமன்ற ஊழியர்கள் சங்கமும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாகக் கைகோர்க்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கிராம நிர்வாக அலுவலர்கள், சாலைப் பணியாளர்கள், அரசுக் கருவூல ஊழியர்கள், மருத்துவத் துறையினர் உட்பட 56 துறையைச் சார்ந்த சங்கங்களும் போராட்டக் களத்தில் ஒன்று சேரவுள்ளது.

இதனிடையே இன்று முதல் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். வரும் 1 ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் இவர்களின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.