Asianet News TamilAsianet News Tamil

கள ஆய்வின்றி கருத்து கணிப்பு, வெளிச்சத்திற்கு வந்த வடமாநில ஊடகத்தின் சீக்ரெட்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்புகளை வடமாநில ஊடகம்  டைம்ஸ் நவ் குழுமம் கள ஆய்வு செய்யாமல் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. கள ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து தமிழக பத்திரிக்கைகள் வெளியிட்ட கருத்து கணிப்புகள் எதார்த்தத்தை பிரதிபலித்த நிலையில் வடமாநில ஊடகத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

secret of english media that released tamil nadu election survey without any field work
Author
Chennai, First Published Mar 26, 2021, 4:21 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்புகளை வடமாநில ஊடகம்  டைம்ஸ் நவ் குழுமம் கள ஆய்வு செய்யாமல் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. கள ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து தமிழக பத்திரிக்கைகள் வெளியிட்ட கருத்து கணிப்புகள் எதார்த்தத்தை பிரதிபலித்த நிலையில் வடமாநில ஊடகத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழ்நாட்டை சேர்ந்த ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. தமிழகத்தின் முன்னணி புலனாய்வு பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 125 இடங்களிலும் தி.மு.க கூட்டணி 109 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆதான் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணிக்கு 130 இடங்களும் தி.மு.க கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் டி.வி ஒளிபரப்பிய கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 124 இடங்களிலும், தி.மு.க 94 இடங்களிலும் 16 இடங்களில் இழுபறி நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெமாக்கரஸி நெட்வர்க் என்ற தனியார் அமைப்பு நடத்திய கள ஆய்வில் 122 இடங்களில் அ.தி.மு.க கூட்டணியும் 111 இடங்களில் தி.மு.க கூட்டணியும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

secret of english media that released tamil nadu election survey without any field work

இதே போல் மக்கள் மையம் நடத்திய கருத்து கணிப்பிலும்ம் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரையும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முதல் 90 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி குறைந்த பட்சம் 122 இடங்களிலும் அதிகபட்சமாக 130 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநில ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி குறைவான இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஊடகங்களின் கணிப்பிற்கு எதிர்மறையாக வடமாநில ஊடகத்தின் கருத்து கணிப்பு அமைந்துள்ளது

அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்த புள்ளியியல் ஆய்வாளர்கள், கள ஆய்வு மேற்கொள்ளாமல், போன் மூலம் தகவலை கேட்டும், குறைவான மக்களிடம் கருத்துகளை கேட்டு கருத்து கணிப்பை வட மாநிலம் ஊடகம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தனர். கள ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே எதார்த்தமான முடிவுகள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம், கள ஆய்வு மேற்கொள்ளாமல் மக்களை திசை திருப்பும் வகையில் வட மாநில ஊடகம் ஒரு கூட்டணிக்கு சாதகமாக  கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வடமாநில ஊடத்தின் செயல்பாட்டிற்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios