Asianet News TamilAsianet News Tamil

"எங்கள் சாவுக்கு சீமான் தான் காரணம்.. இதுதான் என் கடைசி வீடியோ"- விஜயலட்சுமி பரபரப்பு தகவல்

நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Seaman is the reason of our death.. This is my last video- Vijayalakshmi sensational video Rya
Author
First Published Sep 22, 2023, 3:27 PM IST

கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் சீமான் மீது மீண்டும் புகாரளித்து பரபரப்பை கிளப்பினார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய்தாகவும், 5 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அதில் கூறியிருந்தார். மேலும் நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்ற்படை தலைவர் வீரலட்சுமியும் ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் சீமான் – வரலட்சுமி இடையேயான மோதல் முற்றியல் திடீரென சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார் விஜயலட்சுமி, மேலும் சென்னை பக்கமே வரமாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றுவிட்டார்.

 

15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கனும், இல்லைனா..2 கோடி ரூபாய் இழப்பீடு தரனும்! சீமானுக்கு வீரலட்சுமி எச்சரிக்கை

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர் “ இதுதான் எங்களின் கடைசி வீடியோ.. சாவை நோக்கி தான் எங்களின் பயணம் உள்ளது. நானும் சாகப் போகிறேன், எனது அக்காவையும் கூட்டிக்கொண்டு போகப்போகிறேன்.. 2011-ல் நான் இந்த வழக்கை தொடுத்த போது அப்பவும் என்னை அச்சுறுட்தி, என்னை தொந்தரவு செய்து, விசாரணையை தடுத்தனர். 12 வருடங்களுக்கு பிறகு இப்பவும் அதையே தான் செய்கின்றனர்.. மான நஷ்ட வழக்கு போடுவோம் என்று கூறி டார்ச்சர் செய்கின்றனர். எங்களை யாரும் வாழ விடமாட்டார்கள். எனவே நாங்கள் சாகப் போகிறோம். இதற்கு சீமானும், நாம் தமிழர் கட்சியும் தான் காரணம். இதன் பிறகு சீமானை கைது செய்யுங்கள்.. சீமானை தப்ப விடாதீர்கள்.. நான் சாக வேண்டும் என்பது தான் சீமானின் டார்கெட்.. இதற்கு தான் அவர் ஆசைப்பட்டார்.

 

12 வருடங்களாக நான் நரகத்தை அனுபவித்து, விடியல் கிடைக்கும் என்று நம்பினேன்.. அது எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து, மேலும் எங்களை அவமானப்படுத்தி, கெட்டப் பெயர் கொடுத்து வருகின்றனர். காவல்துறையினர் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் விடக் கூடாது.. சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இது தான் எனது கடைசி வீடியோ” என்று பேசி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios