Asianet News TamilAsianet News Tamil

மேற்குவங்காளத்தில் பள்ளிகளுக்கு ஜூன்10 தேதி வரை லீவு.!! முதல்வர் மம்தா அறிவிப்பு.!!

கொரோனாவின் தாண்டவம் இந்தியாவில் குறையாததால்,மேற்கு வங்காளத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Schools in West Bengal Leave till June 10 !! CM Mamata announces. !!
Author
West Bengal, First Published Apr 11, 2020, 9:11 PM IST

T.Balamurukan

கொரோனாவின் தாண்டவம் இந்தியாவில் குறையாததால்,மேற்கு வங்காளத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், ஊரடங்கை வரும்  30 ஆம் தேதி வரை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 

Schools in West Bengal Leave till June 10 !! CM Mamata announces. !!
முன்கூட்டியே ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  மேலும், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமருக்கு  மேற்கு வங்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios