பள்ளிக் கூடங்கள் மத அடையாளங்களை காட்டும் இடமல்ல.. யூனிபார்ம் போடுங்க.. ஹிஜாப் குறித்து குஷ்பு ஆவேசம்.

கல்விக்கூடம் என்பது மத அடையாளங்களை காட்டும் இடம் அல்ல. இந்தியராக வலிமையை காட்ட வேண்டிய இடம். இதைவைத்து அரசியல் செய்பவர்கள் அவமானத்திற்குரியவர்கள். கல்வி என்பது  மதத்தைப் பற்றியது அல்ல, அது சமத்துவத்தைப் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து வர வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ரூல்ஸ். 

Schools are not a place for displaying religious symbols .. wear on uniforms .. Khushboo is obsessed  hijab.

பள்ளிக்கூடங்கள் என்பது மத அடையாளங்களை காட்டும் இடம் அல்ல, அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்பதுதான் பொதுவான ரூல்ஸ், அனைவரும் யூனிபார்ம் அணியவேண்டும் என ஹிஜாப் விவகாரத்தில் நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். ஹிஜாப் தடை கேட்டு பாஜக மற்றும் ஏபிவிபி மாணவர் அணி கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்களை சீண்டும் வகையிலான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில்  முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கூடங்களில் ஹிஜாப் அணிய கூடாது என கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதாவது பள்ளிக்கூடங்கள் என்பது மதத்தை வெளிக்காட்டும் இடம் கிடையாது, மதத்தை காட்ட வேண்டுமென்றால் அதை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ளட்டும், எல்லோரும் பள்ளிக்கூடத்திற்கு சீருடை அணிந்து வரவேண்டும் என உத்தரவு உள்ள நிலையில், இஸ்லாமிய மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்துக்கு  வருவதை ஏற்க முடியாது. எல்லோருக்கும் யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் விதிமுறை ஒன்றுதான், அவர்கள் யூனிபார்ம் அணிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும், அவர்களின் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வருவோம் என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Schools are not a place for displaying religious symbols .. wear on uniforms .. Khushboo is obsessed  hijab.

இந்த போராட்டம் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, சிக்மங்களூர், மங்களூர்,  சிவமொக்கா என பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.  இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பள்ளி நிர்வாகங்களும் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்றும், ஹிஜாப் அணிந்து வந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளன. ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடம் வரும் இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்படும் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.இந்நிலையில்தான் மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரிகள் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவி கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில்  பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது, ஆனால்  அந்த கும்பலை எதிர்த்து நின்று அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Schools are not a place for displaying religious symbols .. wear on uniforms .. Khushboo is obsessed  hijab.

வகுப்பறைக்கு செல்ல முயன்ற மாணவியை ஏபிவிபி மாணவர்கள் இடையூறு செய்து, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட அச்சம்பஙத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுயநலத்திற்காக மாணவர்களிடம் அரசியலை புகுத்துவது நியாயமில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். ஹிஜாப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறை எட்டிய நிலையில் தான் கர்நாடக மாநில அரசு பள்ளி மாற்றம் பியூசி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளிக்கு வந்த மாணவியிடம் இந்துத்துவா மாணவர்கள் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து இஸ்லாமிய மாணிவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இஸ்லாமிய மாணவிகள் பல வருடங்களாக ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்கு வருகிறோம், அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. ஹிஜாப் அணிவது இப்போது அவர்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. ஹிஜாப் அணியக்கூடாது என இந்துத்துவ மாணவர்கள் போராடுகிறார்கள்,  இவர்களை சிலர் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்கிறார்கள். ஹிஜாப் எங்கள் உரிமை, இது எங்கள் மத அடையாளம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Schools are not a place for displaying religious symbols .. wear on uniforms .. Khushboo is obsessed  hijab.

இதில் பலரும் பல வகைகளில் கருத்து கூறி வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பூ சுந்தர், ஹிஜாப்புக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கல்விக்கூடம் என்பது மத அடையாளங்களை காட்டும் இடம் அல்ல. இந்தியராக வலிமையை காட்ட வேண்டிய இடம். இதைவைத்து அரசியல் செய்பவர்கள் அவமானத்திற்குரியவர்கள். கல்வி என்பது  மதத்தைப் பற்றியது அல்ல, அது சமத்துவத்தைப் பற்றியது. பள்ளிக்கு யூனிபார்ம் அணிந்து வர வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ரூல்ஸ். அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த கருத்தை பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சித்து வருகின்றனர். இதேநேரத்தில் கர்நாடக மாநில அரசும் யாராக இருந்தாலும் பள்ளிக்கு ஒரே சீருடையில் தான் வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதாவது மாணவர்கள் யூனிபார்ம் மட்டும் தான் அணிய வேண்டும் வேறு உடையில் வரக்கூடாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios