டிரம்ப் இதில் ஈடுபட்டால் அங்குள்ள விரைவுப் படையின் சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நோக்கம் சிதைந்து விடும்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது அமெரிக்க பயணத்தின் போது ரியாத்துக்காக பல வரலாற்று ஒப்பந்தங்களைச் செய்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராகவும் விளையாடியுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான சந்திப்பின் போது, பின் சல்மான், சூடான் உள்நாட்டுப் போரை நிறுத்த கேட்டுக்கொண்டார். அதற்கு நேர்மறையாக பதிலளித்த டிரம்ப் "சவுதி என்னை தலையிடச் சொன்னால் நான் போரை நிறுத்த முயற்சிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.
சூடானின் உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தால், அது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இதுவரை சூடான் உள்நாட்டுப் போரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகம் பயனடைந்து வருகிறது. சூடானில் உள்நாட்டுப் போர் சூடான் விரைவுப் படைக்கும், அதிகாரப்பூர்வ இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வருகிறது. யுஏஇ விரைவுப் படைக்கு ஆயுதங்களை வழங்குவதால், அதற்கு ஈடாக கடத்தப்பட்ட தங்கத்தைப் பெறுவதாகவும் சூடான் அரசு கூறுகிறது. சூடான் சர்வதேச நீதிமன்றத்திலும் யுஏஇ மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள.

சூடான் இன்டர்நேஷனலின் தகவல்படி, விரைவுப் படை 2024-ல் 150 பில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள ஆயுதங்களைப் பெற்றது. இதற்காக யுஏஇ மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை யுஏஇ மறுத்தாலும், சரியான பதிலளிக்கவில்லை. யுஏஇ உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி சூடானின் விரைவுப் படைக்கு வழங்குகிறது. இந்த ஆயுதங்கள் சூடானில் அழிவை ஏற்படுத்த விரைவுப் படை போராளிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடத்தப்பட்ட தங்கத்தை ஈடாகப் பெறுகிறது. 2024-ல் கடத்தப்பட்ட தங்கத்தில் இருந்து யுஏஇ 7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியது. சூடானில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அவை அங்கு அதிகாரப் போராட்டங்களுக்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கு கடத்தப்படும் தங்கத்தின் மீது கண் வைத்துள்ளது. அது கடத்தல் மூலம் யுஏஇக்கு வருகிறது. இந்த தங்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டித் தருகிறது. இப்போது, சூடானின் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்துவதன் மூலம் சவுதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஏமாற்ற முயற்சிக்கிறது.
டிரம்ப் இதில் ஈடுபட்டால் அங்குள்ள விரைவுப் படையின் சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நோக்கம் சிதைந்து விடும்.

