ரஜினி கட்சியை அறிப்பாரா? மாட்டாரா? என குழப்பத்தில் இருந்த ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினியின் அண்ணன் உற்சாகத் தகவலை கூறியிருக்கிறார். 

அதோ வருகிறேன், இதோ வருகிறேன் என பல ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த ரஜினிகாந்த் கடந்த 2017 டிசம்பரில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார். அதன் பிறகு ரஜினி மக்கள் மன்றம் என்கிற அமைப்பை தொடங்கி ரசிகர்களை தொண்டர்களாக ஒருங்கிணைத்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்து ஓராண்டுகளை கடந்தும் அவர் வாய் திறக்கவில்லை.

வழக்கத்திற்கு மாறாக பல படங்களில் கமிட் ஆகி தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதனால், அவர் கட்சி ஆரம்பிப்பாரா? அறிவிப்போடு விட்டுவிடுவாரா? என்கிற குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ், ‘ரஜினிகாந்த் பொங்கலுக்கு பிறகு கட்சி சம்பந்தமான முடிவுகளை அறிவிப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் நீடித்த போது, அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என சத்தியநாராணராவ் கூறியிருந்தார்.