MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்

இந்த விஜய் வேண்டுமா..? ஸ்டாலின் வேண்டுமா? திமுக இனி ஒரு நொடிகூட தூங்க முடியாது.. பாம் போட்ட விஜய்

ஒரு சிம்பிளான கேள்வி. விஜயை நம்புறீங்களா? இல்ல ஸ்டாலின் சாரை நம்புகிறீங்களா? இந்த போர் முழக்கம் உங்களை இனி ஒரு நிமிடம் கூட தூங்க விடாது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 13 2026, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : x

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய விஜய், ‘‘இவ்வளவு நாள் இதை நான் மட்டும் தான் சொல்லிட்டு இருந்தேன். இப்போது களமே சொல்கிறது இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. இன்று தவெக. இன்னொன்று தூய சக்தி தவெக. எல்லோரும் மத்தவர்களை பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்கிறார் எனக் கேட்கிறார்கள். இல்ல, நான் கேட்கிறேன் இது யாருக்கான எலக்சன்? தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இப்ப இங்க யார் ஆட்சியில் இருக்கிறார்? யார் பொய்யா வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாத்துறது? யாரு மக்கள் விரோத ஆட்சியை நடத்துவது? மக்கள் விரோத திமுக அரசை அகற்றுணும்.

24
Image Credit : X

நாம் யாரை எதிர்க்கணும்? எதுக்கு தேவையில்லாமல் பலமுறை மக்கள் ஏற்கெனவே டெலிட் ஆனவர்கள் மீது எதுக்கு நம்மளுடைய கவனத்தை செலுத்தனும்? நம்மளோட டார்கெட் திமுக. எனக்கு ஒண்ணு தெரியனும். மக்களை விரும்புற விஜய் வேண்டுமா? இல்ல மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? அவ்வளவுதான் மக்கள் சோலிய முடிச்சிட்டாங்க. இந்த தேர்தலில் இதுக்கு நடுவுல வேற யாருமே கிடையாது. புரியுதுங்களா உங்களுக்கு.

Related Articles

Related image1
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
34
Image Credit : X/TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மக்களே.. ஒரு சிம்பிளான கேள்வி. விஜயை நம்புறீங்களா? இல்ல ஸ்டாலின் சாரை நம்புகிறீங்களா? இந்த போர் முழக்கம் உங்களை இனி ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. கடைசி வாரம் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துவிட்டு உடனே கேன்சல் பண்ணி விட்டார்கள். இது உலகத்துக்கு எல்லாம் தெரியும். கேன்சல் செய்துவிட்டு டெக்னிகல் குறைபாடு என்கிறார்கள். எத்தனை வருஷமா ராத்திரி பகலா கஷ்டப்பட்டு எப்படியாவது இந்த வேலை கிடைக்க வேண்டும் என தேர்வை எதிர்கொள்ள வந்த தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அதை யோசித்து பார்த்தீர்களா? ஒரு எக்ஸாம் ஒழுங்கா நடத்த தெரியவில்லை. இதில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம்.

அம்மா அப்பா கிட்ட சொல்லுங்க. எல்லோரும் தைரியமாக இருங்கள். வரப்போவது உங்கள் ஆட்சி. நம்ம ஆட்சி. அதனால் இது போல் நடக்காமல் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சி அமைப்போம். இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை மனசில் வைத்துக் கொண்டு டிரான்ஸ்பரண்டாக அதற்கான ஒரு தீர்ப்பை காணவும் முயற்சிப்போம். நான் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒரு பொலிட்டிக்கல் பாம்பு ஒன்று சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா? ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று ஒன்று சொன்னேன். இப்போது அந்த பொலிட்டிக்கல் பாம் எல்லா கூட்டணியிலும் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சார் எல்லாம் பதறுகிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது என்கிறார்.

44
Image Credit : X/TVKVijayHQ

அவர்களை பொறுத்த வரைக்கும் ஜெயிக்கிறதுக்காக மட்டும் தான் கூட்டணி. மத்த எல்லாத்துக்குமே அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக.. வரும் வெல்த் எல்லாம் பார்ப்போம் தனியாக. வெல்வோம் ஒன்றாக என்பதன் சீக்ரெட் இதுதான். புரிய வேண்டியவர்களுக்கு நன்றாக புரியும் என்கிறேன். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மளோட மக்கள் இருக்கிறார்கள். இதுக்கு மேல என்ன வேணும்? நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும்’’ எனத் தெரிவித்தார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
Recommended image2
கனிமொழியை ஓரம்கட்டு..! சபரீசனுக்கு ராஜபாட்டை..! கருணாநிதி பாணியில் களமிறக்கும் ஸ்டாலின்..!
Recommended image3
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
Related Stories
Recommended image1
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved