MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • கனிமொழியை ஓரம்கட்டு..! சபரீசனுக்கு ராஜபாட்டை..! கருணாநிதி பாணியில் களமிறக்கும் ஸ்டாலின்..!

கனிமொழியை ஓரம்கட்டு..! சபரீசனுக்கு ராஜபாட்டை..! கருணாநிதி பாணியில் களமிறக்கும் ஸ்டாலின்..!

டெல்லியில் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனசாட்சியாக செயல்படக்கூடிய ஒரு நபர் தேவை என்பதால், கலைஞருக்கு முரசொலி மாறன் எப்படி இருந்தாதோ, அதே போல் உதயநிதிக்கு சபரீசன் இருப்பார் என ஸ்டாலின் நம்புகிறார்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 13 2026, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்டாலினுக்கு மனசாட்சியாக சபரீசன்
Image Credit : Asianet News

ஸ்டாலினுக்கு மனசாட்சியாக சபரீசன்

அன்றைக்கு மறைந்த முதல்வர் கலைஞருக்கு டெல்லியில் மனசாட்சியாக விளங்கியவர் மறைந்த முரசொலிமாறன். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு டெல்லியின் மனசாட்சியாக சபரீசன் மாறப்போகிறார் என்ற தகவல்கள் கசிகிறது.

சபரீசனின் ‘பென்’ நிறு​வனம் உடனுக்​குடன் சர்​வேக்​களை எடுத்து திமுக-​வின் சாதக பாதகங்​களை சமர்ப்​பித்து வரு​கி​றார்​கள். சோஷியல் மீடி​யா​வில் ஆக்​டி​வாக அதி​க​மான ஃபாலோயர்​களு​டன் இயங்​கும் பிரபல்​ய​மான முகங்​களுக்கு ‘தேவை​யான’ கன்​டென்ட்களைக் கொடுத்து கருப்பு &- சிவப்பு சாயல் வராத அளவுக்கு அவர்​களை திமுக-வுக்கு ஆதர​வாகப் பேசவைப்​ப​தில் பெரும்​பங்காற்​றுகிறது ‘பென்’ டீம். வேட்​பாளர் தேர்​விலும் இவர்​களின் ‘பேக் வொர்க்’ இம்​முறை பிர​தான​மாக இருக்​கும் என்​கி​றார்​கள்.

24
நேரடி​யாகவே களத்​துக்கு வந்த சபரீசன்
Image Credit : Asianet News

நேரடி​யாகவே களத்​துக்கு வந்த சபரீசன்

இந்த நிலை​யில், இத்​தனை நாளும் சென்​னை​யில் இருந்து கொண்டு தனது பரி​வாரங்​களை மாநிலம் முழுக்க இயக்கி வந்த சபரீசன், தற்​போது நேரடி​யாகவே களத்​துக்கு வந்து கட்​சி​யின் முக்​கிய பிர​முகர்​களைச் சந்​தித்து கள நில​வரம் குறித்து ஆலோ​சனை நடத்தி வரு​கி​றார். கட்​சி​யினர் மட்​டுமல்​லாது, அந்​தந்​தப் பகு​தி​யில் மெஜாரிட்​டி​யாக இருக்​கும் சமூகங்​களைச் சார்ந்த முக்​கிய பிர​முகர்​களை​யும் சந்​தித்​துப் பேசி திமுக-வுக்​காக ஆதரவு திரட்டி வரு​கி​றார் சபரீசன்.

சபரீசனுக்கு பூர்வி​கம் திருநெல்​வேலி மாவட்​டம் அரிய​நாயகபுரம் கிரா​மம். இங்​குள்ள வீட்​டில் தான் தென் மாவட்ட திமுக நிர்​வாகி​களை அவ்​வப்​போது சந்​தித்து அவர் ஆலோ​சனை நடத்​து​வார். ஆனால், இது தேர்​தல் நேரம் என்​ப​தால் மாவட்ட திமுக அலு​வல​கத்​துக்கே விசிட் அடித்து கட்சி நிர்​வாகி​களு​டன் ஒன் டு ஒன் சந்​திப்​பு​களை அவர் நடத்தி வரு​வது பேசுபொருளாகி இருக்​கிறது. சபரீசன் நேரடி​யாகக் களத்​துக்கு வந்து கருத்​துக் கேட்க ஆரம்​பித்​திருப்​பது திமுக-​வினர் மத்​தி​யில் விவாதப் பொருளாகி இருக்​கிறது.

Related Articles

Related image1
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
34
நிர்வாகிகளை சந்திக்கும் சபரீசன்
Image Credit : our own

நிர்வாகிகளை சந்திக்கும் சபரீசன்

இது குறித்து நம்​மிடம் பேசிய சீனியர் உடன்பிறப்பு ஒருவர், “இந்​தத் தேர்​தல் திமுக-வுக்கு மிக முக்​கிய​மான ஒன்​று. அதனால் தான் ஒட்​டுமொத்த தலை​வர் குடும்​ப​மும் ஆளுக்​கொரு திசை​யில் பம்​பர​மாக சுற்​றுகி​றார்​கள். அந்த வகை​யில், கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் கட்​சி​யினரு​டான ஒன் டு ஒன் சந்​திப்பை சபரீசன் நடத்தி இருக்​கி​றார். தனது விசிட்​டின் போது, தொகு​திப் பார்​வை​யாளர்​கள், மாவட்ட, ஒன்​றிய நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக சந்தித்துப் பேசி வரு​கி​றார்.

44
எம்.பி.,யாகும் சபரீசன்
Image Credit : our own

எம்.பி.,யாகும் சபரீசன்

2021 தேர்​தலில் தமி​ழ​கம் முழு​வதும் தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட உதயநி​திக்கு பரி​சாக அமைச்சரவையில் இடமளிக்​கப்​பட்​டது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் திமுக கூட்​டணி அனைத்​துத் தொகு​தி​களி​லும் வெற்​றி​பெற்​றதை அடுத்து துணை முதல்​வர் அந்​தஸ்​தும் உதயநி​தி​யைத் தேடி வந்​தது. அதே​போல், இது​வரை திரை மறை​விலேயே செயல்​பட்டு வந்த சபரீசன் இம்​முறை நேரடி​யாகவே களத்​துக்கு வந்​திருப்​பதை அடுத்து அவரும் அதி​காரத்​துக்கு வரலாம் என்ற பேச்​சுகள் இப்​போதே வலம் வரத் தொடங்​கி​விட்​டன. அடுத்​த​தாக திமுக சார்​பில் ராஜ்யசபாவுக்கு அனுப்​பப்​படும் நபர்​களில் சபரீசனும் ஒரு​வ​ராக இருக்​கலாம்.

ஏனென்றால் டெல்லியில் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனசாட்சியாக செயல்படக்கூடிய ஒரு நபர் தேவை என்பதால், கலைஞருக்கு முரசொலி மாறன் எப்படி இருந்தாதோ, அதே போல் உதயநிதிக்கு சபரீசன் இருப்பார் என ஸ்டாலின் நம்புகிறார். எனவே, வருகிற ராஜ்யசபா தேர்தலில் சபரீசன் டெல்லி செல்வது உறுதி’’ என்றனர்.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
Recommended image2
17 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி பிரவேசம்... வங்கதேசத்தின் திடீர் பிரதமாராகும் தாரிக் ரஹ்மான்..!
Recommended image3
"ஈபிஎஸ் கோட்டையில் 'தளபதி' என்ட்ரி: சேலத்தில் இன்று விஜய் காட்டப்போகும் அரசியல் அதிரடி!"
Related Stories
Recommended image1
‘அஞ்சி ஆயிரம்..’ அதிமுக வாக்குறுதியை காப்பியடித்த ஸ்டாலின்... எடப்பாடி ஆவேசம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved