sathyaj and kamal has no love on tamil says h raja

நடிகர் கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோரின் தமிழ் உணர்வு மேலோட்டமானது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில் கடந்த 9 ஆண்டுகளுக்கு காவிரி விவகாரத்தில் கர்நாடாகவைக் கண்டித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தற்போது கையில் எடுத்துள்ள கன்னட அமைப்புகள், சத்யராஜ் பொதுமன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

மேலும் கர்நாடாகாவில் உள்ள எந்தத் திரையரங்குகளிலும் பாகுபலி திரைப்படம் வெளியிட அனுமதிக்க மாட்டோம்என்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதற்கிடையே திரைப்படத்தை வெளியிட ஒத்துழைக்கும்படி சத்தியராஜ் வலியுறுத்தி இருந்தார்.

Scroll to load tweet…

இந்தச் சூழலில் நடிகர் கமல்ஹாசன், சத்யராஜ் ஆகியோரது தமிழ் உணர்வு மேலாட்டமானது தான் என்றும், பணத்திற்காகவேஇவர்கள் கவலைப்படுவதாகவும் மேலும் பாகுபலியை கர்நாடகாவில் திரையிடவில்லையென்றால் வானம் இடிந்து விடாது என்றும் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டி உள்ளார்.