sasikala wrote letter to admk volenteers from bangalore jail

அதிமுக என்னும் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிரிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு சிறிதளவேனும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்றும் பெங்களூரு சிறையில் இருந்து தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் இரண்டாக இருந்த அணி தற்போது மூன்றாக உடைந்துபோனது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வலுத்து வருகிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அதிமுக காணாமல் போய்விடுமோ என அக்கட்சியின் தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு சிறையில் உள்ள சசிகலா அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்
வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் என்றும் சசிகலா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.