அரசியலை துறந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வரின் தோழியான சசிகலா. இது எடப்பாடி பழனி சாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த சசிகலாவின் அறிக்கையில், ‘’அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயபடுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் நறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.  நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காவோ, அதிகாரத்திற்காவோ ஆசைப்பட்டத்தில்லை. புரட்சுத் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நாம் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுக்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிராத்தனை செய்து கொண்டே இருப்பேன்’’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதன் மூலம் அவரது உள்ளங்கிடங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நமது ஏசியா நெட் தமிழில் ஏற்கெனவே கோடிட்டு காட்டி இருந்தோம்...என்னை ஒதுக்கியே தள்ளினாலும் அதிமுக மட்டும் வீழ்ந்துவிடக் கூடாது... மனம் மாறிய சசிகலா