Asianet News TamilAsianet News Tamil

பச்சை புடவை கட்டி அமாவாசையன்று அட்வான்ஸாக கிளம்பிய சசிகலா... திடீர் திருப்பம்..!

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடவும் சசிகலாவின் இந்த ஆன்மீகப் பயணம் உதவும் என நம்பிக்கை கொண்டுள்ளாராம் சசிகலா. 
 

Sasikala who left in advance on the new moon ... a sudden turn towards cinema
Author
Tamil Nadu, First Published Mar 13, 2021, 3:22 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் அனல் பறத்திக் கொண்டிருக்கின்றன. இதில், பெரிதும் எதிர்பார்த்த  சசிகலா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் திடீர் திருப்பமாக அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்கள். 

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார். ஆனால் சில அரசியல் காரணங்களால் சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக பகிரங்கமாக அறிவித்து விட்டார். இதனால், சசிகலாவை முன்வைத்து அமமுகவை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்து விடலாம் என்ற டி.டி.வி.தினகரனின் கனவு பாழாய்ப் போனது.Sasikala who left in advance on the new moon ... a sudden turn towards cinema

இதற்குமேல் சசிகலா இன்றியே அமமுக செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொண்டு டி.டி.வி.தினகரன் மனதை தேற்றிக்கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டு சசிகலா ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தார். அவர் வரும் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், இன்று அமாவாசை என்பதால் சிறப்பு நாளான இன்று முதல் அவர் தனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.Sasikala who left in advance on the new moon ... a sudden turn towards cinema

இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுடன் சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு அவர் சென்று வழிபாடு செய்தார். இன்று முதல் பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடவும் சசிகலாவின் இந்த ஆன்மீகப் பயணம் உதவும் என நம்பிக்கை கொண்டுள்ளாராம் சசிகலா. 

Follow Us:
Download App:
  • android
  • ios