அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்பாக இனி தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம் என டி.டி.வி. தினகரன் இடம் சசிகலா கண்டிப்புடன் கூறி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து மிகுந்த அவமானகரமான நிலையில் உள்ளது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததுடன் பல தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கமல் மற்றும் சீமான் கட்சியினர் மூன்றாவது இடத்தை பிடித்தனர். 

இந்த நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி. தினகரன் நேற்று சென்று சந்தித்தார். இதற்கு முந்தைய சந்திப்புகளின்போது நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளத்தை காட்டப்போவதாக சசிகலாவிடம் தினகரன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதால் சசிகலா தினகரன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சசிகலா தினகரன் சந்திப்பு இந்த முறை 20 நிமிடங்களில் முடிந்து விட்டதாக கூறுகிறார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் டி.டி.வி. தினகரனை சசிகலா சந்தித்தாகவும் சொல்கிறார்கள். தோல்விக்கான காரணம் என்று தினகரன் பேச ஆரம்பித்ததுமே அவரது வாயை அடைத்த சசிகலா எல்லாம் எனக்கு தெரியும் உன்னுடைய அவசரத்தால் அனைத்தும் போய்விட்டது என்று வெடித்துள்ளார் சசிகலா. 

ஆர்.கே.நகர் எனும் சிறிய தொகுதிகள் வெற்றி பெற்று விட்டு தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று எடுத்த முடிவே முட்டாள்தனமானது என்று தினகரனிடம் பாடம் எடுத்துள்ளார் சசிகலா. நீ செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் எப்படி கூடுகிறது என்று எனக்கு தெரியாதா என்றும் சசிகலா காட்டமாக கேட்டுள்ளார். இருந்தாலும் உன் மீது நம்பிக்கை இழந்த காரணத்தினால் தான் நீ சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டினேன் ஆனால் தற்போது அவமானத்துடன் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டார் என்று சரமாரியாக தினகரனிடம் கேள்விகளால் சசிகலா குறித்து எடுத்துள்ளார். 

அதோடு மட்டுமல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது உன் கட்சி நீயே பார்த்துக்கொள் என்று கூறி தினகரன் வைத்ததாகவும் சொல்கிறார்கள். பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாமல் போய் வருகிறேன் என்று மட்டும் கூறிவிட்டு தினகரன் பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்ததாக சொல்லப்படுகிறது. உள்ளே நடந்தது குறித்து யாரிடமும் வாய் திறக்காமல் இருந்த தினகரன் ஒரு கட்டத்தில் தேர்தலில் தோல்வி என்றால் சகஜம் தான் இதை புரிந்துகொள்ளாமல் சின்னம்மா ஏன் இப்படி பேசுகிறார் என்று காரிலேயே புலம்பியதாகவும் கூறுகிறார்கள். 

இனி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சசிகலா தரப்பிடம் இருந்து நிதி உதவி உள்ளிட்ட எதுவும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவதாகவும் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். இதற்காகவே காத்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் விரைவில் சிறையில் சென்று தனது சகோதரியை சந்தித்து சமாதானமாகப் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.