பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. சசிகலா உள்ள பெங்களூரு சிறையில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. சிறையில் சொந்த உடைகளை பயன்படுத்தலாம் என சட்ட விதிகள் உள்ளது. 

இப்படி இருக்கையில், சிறையில் ராஜபோக வசதிகளை அனுபவித்து வருவதாக தவறான பொய் தகவல்களை பரப்பிய சிறைத்துறை முன்னாள் அதிகாரி  ரூபா மீது வழக்குத் தொடரப்போவதாக  சசிகலா வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.   

சசிகலாவை அவதூறாக பேசியதால், மதுரை உசிலம்பட்டியில்  அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் கலைக்கட்டியுள்ளது. அந்த போஸ்டரில், "உலகத்தில் தன்மானத்திற்கு தலைவணங்காத இந்தியா, இலங்கை பல நாடுகளில் போரிட்டு வெற்றிகண்ட வம்சத்தை சேர்ந்த சோழ நாட்டு பேரரசி சின்னம்மா அவர்களை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம் இப்படிக்கு சோழ நாட்டு போர்ப்படை அமைப்பாளர் காவல்துறை தன்மான போராளி மா.ஒச்சாத்தேவர் காவல்துறை HC/CR உசிலம்பட்டி மதுரை மாவட்டம்" இப்படியான போஸ்டர் களைகட்டியுள்ளது.