Asianet News TamilAsianet News Tamil

சசிகலா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்... வேலூரில் டி.டி.வி. பின் வாங்கியதன் பின்னணி..!

முக்கிய முடிவு எடுக்க தினகரனுக்கு சசிகலா போட்ட தடை தான் வேலூர் தேர்தலில் இருந்து அமமுக பின்வாங்கியதற்கான காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Sasikala Strict Order
Author
Tamil Nadu, First Published Jul 9, 2019, 10:41 AM IST

முக்கிய முடிவு எடுக்க தினகரனுக்கு சசிகலா போட்ட தடை தான் வேலூர் தேர்தலில் இருந்து அமமுக பின்வாங்கியதற்கான காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர தினகரன் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்தால் அது பல அடி பின்னோக்கி சறுக்குகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் கூடாரமே காலியான நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம், தொண்டர்கள் சந்திப்பு என்று மீண்டு வர டி.டி.வி.தினகரன் எடுக்கும் முடிவுகள் எதற்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலைலயில் தான் வேலூர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 Sasikala Strict Order

அங்கு அமமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்று திட்டவட்டமாக 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் டி.டி.வி.தினகரன் இந்த நிலையில் தான் கடந்த வாரம் பெங்களூர் சென்ற தினகரன் சசிகலாவை சந்தித்துவிட்டு திரும்பினார். சசிகலா இந்த முறை டிடிவியை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டதாக சொல்கிறார்கள். தங்கதமிழ்செல்வன் போனதை கூட சசிகலா பெரிய விஷயமாக கருதவில்லை. Sasikala Strict Order

ஆனால், இசக்கி சுப்பையா விவகாரம் சசிகலாவை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் இசக்கி சுப்பையை சசிகலாவின் அன்பை பெற்றவர். இந்த ஒரே காரணத்திற்காகவே ஜெயலலிதா இசக்கி சுப்பையாவை கட்சியில் இருந்த ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு சசிகலாவிற்காக சென்னை விஷயங்களை இசக்கி தான் கவனித்து வந்தார். சசிகலா கட்சி அலுவலகம் செல்லும் போதெல்லாம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் இவர் தான். Sasikala Strict Order

இப்படிப்பட்ட ஒரு விசுவாசி நம்மிடம் இருந்து செல்கிறார் என்றால் உன்னிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று சசிகலா சீறியதாகவும், தான் வெளியே வரும் வரை கட்சி விவகாரங்களில் எந்த முக்கிய முடிவும் எடுக்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வேலூர் தேர்தல் குறித்த பேச்சின் போது நாம் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா கூறியதாகவும் இதனை தொடர்ந்தே அமமுக போட்டியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios