Sasikala split in AIADMK - H. Raja
சசிகலாவின் அதீத அதிகார பசியின் காரணமாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது என்றும், மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஹெச். ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுவை ஊழல் அரசாங்கத்தினால் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போயுள்ளது என்று கூறினார்.
புதுவை ஆட்சியாளர்கள், ஆளுநர் கிரண்பேடியோடு மோதல் போக்கினை கடைப்பிடித்து ஊழல் செய்து வருகின்றனர் என்றார்.
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து நீதிபதி கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசாங்கத்தன் உட்கட்சி பிரச்சனைகளை வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதாக தான் கருதுவதாகவும் கூறினார்.
டிடிவி தினகரன் இருண்டதெல்லாம் பேய் என்ற நோக்கில் உள்ளார். அதிமுகவின் எந்தவொரு செயலிலும் பாஜக இல்லை.
சசிகலாவின் அதீத அதிகார பசியின் காரணமாகவே அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்களில் சசிகலா உள்ளார் என்றும் மன்னார்குடி குடும்பத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கூறினார். வரும் 20 ஆம் தேதி இதற்கான முடிவு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.
