வான்கோழி மயில் ஆகாது... கட்சி பொறுப்பை ஏற்க அவருக்கு தகுதி இல்லை என தற்போதைய அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்தார் அக்கட்சியின் பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.

மேலும் தமக்கு ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டர்.

இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகுவது உறுதியானது.

பின்னர் சென்னைக்கு கூட வரமால் செங்கல்பட்டு பக்கத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சிகள் பேட்டியளித்து கொண்டிருந்தார்.

அதில் அதிமுக தலைமை பற்றி கடும் விமர்சனங்களை முனவைத்தார்.

தான் அரசியலில் இருந்தே விலகபோவதாகவும், இலக்கிய பணிகளை தொடரப்போவதாகவும் ஸ்டாலினையும் புகழ்ந்தார்.

மீண்டும் அதிமுக அழைத்தால் பேசுவேன் என்றார்.

இப்படி குழப்பு குழப்பு என்று குழப்பிய சம்பத் இறுதியில் இன்று அதிமுகவின் சின்னம்மா சசிகலாவை போயஸ் தொட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

எதிர்ப்புக்குரல் எழுப்பிகொண்டிருந்த சம்பத் சசிகலாவை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்ற போவதகவும் சின்ன்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.

சின்னமாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யபோவதாகவும் அந்தர் பல்டி பேட்டியளித்துள்ளர்,

நாஞ்சில் சம்பத் கட்சியிலிருந்து வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையும் சசிகலா ஆதரவளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது இந்த சந்திப்பு.