நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை கொள்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. நாட்டிலேயே நீட்டை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான். சசிகலா விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.