சசிகலா வந்தவுடன் அதிமுக, அமமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது தனது கருத்து என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளிடம் அதனை தடுக்க யுக்திகள் இல்லை. உலகளாவில் மருந்து வந்தால்தான் தீர்வு ஏற்படும். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மின்சார கட்டணத்தை பார்த்தால் ஷாக் அடிக்கிறது. விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தொடர்ந்து தர வேண்டும். பாஜகவை தவிர மற்ற கட்சிகளை மக்கள் விரும்புகின்றனர்.

மேலும், பேசிய அவர் அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை. சசிகலா வந்தவுடன் அமமுக - அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு புதிதாகக் கோயில்கள் தேவையில்லை. இந்தியாவிற்கு மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளிகள் தான் தேவை. ரஜினியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற தமிழருவி மணியன் பேசியுள்ளார். தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர், அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது என விமர்சனம் செய்துள்ளார்.