sasikala reject edappadi and panneers request
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன ஆக்ராஹாரா சிறையில் உள்ள சசிகலா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூதை நிராகரித்து விட்டார் என செய்திகள் உலாவருகிறது.
எடப்பாடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும் பாஜகவின் அழுத்தம் காரணமாகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு பன்னீருடன் கைகோர்த்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. திஹாருக்கு சென்று திரும்பிய தினகரனை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த அதிரடியை தொடர்ந்து செய்துவந்தார். ஆனால், தினகரனோ தன்னை மதிக்காத எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.

தினகரனில் இந்த குடைச்சளால் அவர் ஆதரவாக செயல் பட்டதால் 18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்து வீட்டுக்கு அணிப்பினார் எடப்பாடியார். தற்போது தினகரனுடன் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்கள் உள்ளனர். இதனையடுத்து வந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவையே படுதோல்வியடைய செய்தார். தினகரனின் செயல் பாடுகளால் கடும் கோபத்தில் இருந்த சசி குடும்பத்தினர். தினகரனின் வெற்றிக்குப் பின் சசிகலா குடும்பமும் தினகரனுக்கு ஆதரவாகவும் அவர் எந்த முடிவெடுத்தாலும் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அமைதி காத்து வருகின்றனர்.

இதனையடுத்து, பேருந்து கட்டண உயர்வு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்வு என தமிழக மக்களை கோபத்தில் தள்ளியுள்ளதால் எடப்பாடி அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தனக்கு சாதகமாக அமையும் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார். ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கும் போதும், மக்கள் முன்பு பேசும் போதும் தொடர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக பேசுகிறார்.

இந்நிலையில், 2017ம் ஆண்டிலேயே, முக்கிய அமைச்சர் மூலம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு எடப்பாடி ஒரு கடிதம் அனுப்பினாராம். அதில், தினகரன் தங்களுக்கு தரும் நெருக்கடியை பட்டியலிட்ட எடப்பாடி & கோ, தினகரனை தயவு செய்து ஒதுங்கியிருக்க சொல்லுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் தலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” எனக் சொன்னார்களாம். ஆனால், எடப்பாடி மீது கடுமையான கோபத்தில் இருந்த சசி அந்த கடிதத்தை பிரித்துக்கூட பார்க்கவில்லையாம். திருப்பி அனுப்பிவிட்டாராம், அந்த சமாதான முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

ஆர்.கே.நகர் வெற்றிக்கு பின் எடப்பாடி அரசை தினகரன் ஏகத்துக்கும் விமர்சித்து வருகிறார். தற்போது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ள தினகரன், செல்லும் இடமெங்கும் எடப்பாடி அரசுக்கு எதிராகவே பேசி வருகிறார். எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும் என அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அதாவது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கு, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். எப்படியும் அந்த தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும். அப்படி வரும் பட்சத்தில் அதையே காரணமாக வைத்து எடப்பாடி அரசின் மீது என மோடி நடவடிக்கை எடுக்கலாம்.
இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் எடப்பாடி, சசிகலாவிற்கு மீண்டும் ஒரு தூது படலத்தை நிகழ்த்தியுள்ளார். அதில், உங்களுக்கு எதிராக நாங்கள் எங்கேயும் பேசுவதில்லை. தினகரனை மட்டுமே விமர்சிக்கிறோம். அவரின் செயல்பாடுகளால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவரை ஒதுக்கி வையுங்கள். ஜெ.வின் காலத்தில் உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும் அப்படியே கிடைக்கும்” எனக் சொன்னார்களாம்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத சசிகலா, தினகரனை விட்டுக் கொடுக்க முடியாது, நான் சிறைக்கு வருவதற்கு முன்பு துணைப் பொது செயலாளராக தினகரனை நியமித்தேன் ஆனால் நீங்க அவரை கட்சியை விட்டு நீக்கி, பாஜக சொல்வதர்க்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறீங்க அதனால் உங்களுக்கு எந்த உதவியையும் என்னால் செய்ய முடியாது என உறுதியாக கூறிவிட்டதோடு, கட்சி மற்றும் ஆட்சியை எங்கள் பக்கம் கொண்டு வருவது எப்படி என எங்களுக்கு தெரியும் என இன்னொரு ஷாக்கையும் கொடுத்து அனுப்பினாராம். சசியின் இந்த பதிலால், எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
