சசிகலாவின் ஆடம்பர சிறை வாழ்க்கையை வீடியோ ஆதாரங்களுடன் வெளியாட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா கன்னட சினிமாவின் பின்னணி பாடகியாக உருவெடுத்துள்ளார்...


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறையில் உள்ள சசிகலா தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சிறையில் ஆடம்பரமாக  வாழ்கை வாழ்கிறார் எனவும், அதற்கான  வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ்  அதிகாரியான ரூபா மிகவும் நேர்மையும் கண்டிப்புமான அதிகாரி என பெயரெடுத்தவர் ஆவார்

 தவறு செய்பவர்களை நடுங்கவைக்கும் தோரணையுடன் வலம் வந்த ஸ்ட்ரிட்  ஆபிஸர் | ரூபா, இசையிலும் தனக்கு திறமையுள்ளது என்பதை வெளிபடுத்தியுள்ளார்

சமீபத்தில் தன் இசை ஆர்வத்தை  தொலைக்காட்சி  நிகழ்ச்சியொன்றின் மூலம் வெளிப்படுத்தினார் ரூபா

அதைக் கண்ட  பேயலதாதா பீமண்ணா  படக்குழுவினர், தங்களது திரைப்படத்திற்கு ஒரு பாடலைப் பாடி தரும்படி ரூபாவிடம் கேட்டுள்ளனர், நீண்ட யோசனைக்குப் அதற்கு சம்மதம் தெரிவித்த அவர் அந்த படத்திற்காக ஒரேயொரு பாடலை மட்டும் பாடியுள்ளார் 

அது குறித்து பேசிய அவர் இந்துஸ்தானி இசையை  தாம் கற்று உள்ளதாகவும் எனவே அதற்கேற்றபடி ஒரே ஒரு பாடலை மட்டும் பாடிக்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு வார காலம் பயிற்சி எடுத்து பின்னரே பாடலை பாடியதாக தான் பாடகியான அனுபவத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்  

பின்னணி பாடலை பொறுத்தவரையில் ஜானகி, லதா மங்கேஷ்கர், வாணிஸ்ரீ ஜெயராம், உள்ளிட்டோரின்  பாடல்கள் பிடிக்கும் என்றும்  ஸ்ரேயா கோஷலின் பாடல்கள் தன்னை அதிகம் கவர்ந்தவை என்றும்  ரூபா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்