தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்த போது அவரது உடலை சுற்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்ப உறுப்பினர்கள் இருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் சுமார் 30 ஆண்டுகள் தோழியாக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரை பொதுச் செயலாளர் ஆக்க முயற்சி நடக்கிறது

முதல் அமைச்சர் ஜெயலலிதா தோழி சசிகலா தனது நெருங்கிய உறவினர்கள், சகோதரர்கள், மைத்துனர்கள் மற்றும் , சகோதரர்களின் மகன் மகள்களுக்கு அரசு நிர்வாகம் மற்று கட்சி நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளார் .சசிகலாவின் இந்த அதிரடி உத்தரவை கேட்டதும் அவரது உறவினர்கள், அதை ஏற்றுக் கொண்டனர். என சசிகலா உறவினர்கள் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது
மேலும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சசிகலா கடந்த புதன் கிழமை போயஸ் கார்டனில் கூட்டிய தனது குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.

