அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது . இதில் கலந்து கொள்ள வந்த சசிகலா கருப்பு சிவப்பு உடையில் புத்துணர்ச்சியுடன் வந்து தொண்டர்களை அசத்தினார்.
அதிமுக பொது செயலாளராக மறைந்த முதலவர் ஜெயலலிதா இருந்த வரையில் மவுனமாக ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்தவர் சசிகலா.
பொதுக்கூட்டங்களில்,கட்சி நிகழ்ச்சிகளில் எந்தவித முகபாவனைகளும் இல்லாமல் அமர்ந்திருப்பார் சசிகலா.

தெரிந்தவர்கள் கும்பிடும்போது ஒரு சின்ன புன்சிரிப்புடன் வணக்கம் வைப்பார். இதுதான் பொது நிகழ்ச்சிகளில் சசிகலாவின் அதிகபட்ச வெளிப்பாடு.
முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சியை வழிநடத்த ஒருமித்த தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.
முதல் சில வாரங்கள் சாதாரணமாக இருந்த அவர் பொதுசெயலாளராக பதவியேற்க வந்த அன்று உடை, தலையலங்காரம் அனைத்தையும் மாற்றி தொண்டர்களை அசத்தினார்.

கட்சி தலைமை உற்சாகமாக இருந்தால் தொண்டர்களும் உற்சாகமடைவார்கள்.இதை வலியுறுத்தும் வகையில் சமீபகாலமாக சசிகலா நடை உடை பாவனையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பின் பொது வண்ண ஆடைகளில் வந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
அதன் பின்னர் நேற்று எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த சசிகலா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதி புத்துணர்ச்சியுடன் இருந்தார்.

கருப்பு சிவப்பு சேலையில் பளபளவென்று ப்ரெஷ்சாக இருந்த சசிகலா கட்சி அலுவலக பால்கனியில் சென்று தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
சுறுசுறுப்புடன் உற்சாகமாக காணப்பட்ட அவர் கட்சி தொண்டர்கள் இருவரின் பெண் குழந்தைகளுக்கு ஜெயஸ்ரீ, ஜெயா சந்தியா என பெயரிட்டார்.

குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
பளபள உடையில் புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக காணப்பட்ட சசிகலாவின் உற்சாகம் தொண்டர்களையும் தொற்றிகொண்டது.
"10 வயது குறைந்தது போல் சின்னம்மா இருக்காங்க" என்று ஆச்சர்யத்துடன் தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.
