Asianet News TamilAsianet News Tamil

மக்களை ஏமாற்றுவது திமுகவிற்கு கைவந்த கலை..! வெற்று அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை..! சசிகலா ஆவேசம்

ஒரு ஆட்சியின் சிறப்பை மற்றவர்கள் பாராட்டுவதுதான் முறை. ஆனால், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே விமர்சனங்கள் செய்யும்போது தம் ஆட்சியின் சாதனையை தாங்களே வியந்து பாராட்டும் விந்தை தமிழகத்தை தவிர வேறெங்கும் நடக்கவில்லை என சசிகலா விமர்சித்துள்ளார்.

Sasikala has accused the DMK government of cheating government employees
Author
First Published Dec 14, 2022, 7:53 AM IST

வெற்று அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை

அரசு ஊழயர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று அறிக்கைகளை வெளியிடுவதும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்ததும் அதை மறந்து வாக்களித்த மக்களை ஏமாற்றுவதும் திமுகவினருக்கு கைவந்த கலை, அண்மையில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலிலும் அப்படி பல அறிவிப்புகள் வெளியிட்டார்கள். ஆனால் எதையுமே இதுவரை ஒழுங்காக செயல்படுத்தவில்லை. குறிப்பாக,

பள்ளி மாணவர்களிடையே அடிகரித்த போதை பழக்கம்… வீடியோ ஆதரத்துடன் குற்றம்சாட்டிய அண்ணாமலை!!

காலியாக அரசு பணியிடங்கள்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனே நிரப்பி விடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்கள். எப்போது வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்தவர்கள் எல்லாம் திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தார்கள். ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நேரத்தில் கூட எந்தத் துறையிலும் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவில்லை. அதன்பிறகு, ஓய்வுபெற்றவர்களின் இடங்களும் காலியாகவே உள்ளன. இந்த இடங்களையெல்லாம் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாகவே நிரப்ப வேண்டும். போக்குவரத்துத் துறை, வீட்டுவசதி வாரியம் போன்ற துறைகளிலும், மக்கள் தொடர்பு அதிகாரி போன்ற சில அரசு பதவிகளும் முன்பு நேரடியாகவே நியமனங்கள் நடந்தன. அதையும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாகவே நிரப்ப வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்கள் மாற்றினார்கள்.

நீங்க ஈவெரா கொள்கையை ஏற்பவராக இருந்தால் எமகண்ட நேரத்தில் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்.. உதயநிதியை சீண்டும் பாஜக.!

அகவிலைப்படி உயர்வு என்ன ஆச்சு

இன்றைக்கு, தேர்வாணையத் தலைவர் பதவியும், பல உறுப்பினர்கள் பதவியும் பல மாதங்களாகக் காலியாகவே உள்ளன. தேர்வாணையத்தின் நிலைமையே கவலைக்கிடமாக உள்ளபோது, பின்பு எப்படி பிற துறைகளில் காலியாகவுள்ள இடங்களை இவர்கள் எப்படி எப்போது நிரப்பப் போகிறார்கள். மேலும், திமுக தலைமையிலான ஆட்சியில் அரசு ஊழியர்களின் நிலையோ மிகுந்த பரிதாபகரமாக இருக்கிறது. அதாவது, 01-07-2022 முதல் நான்கு சதவிகித அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு உடனே வழங்கி விட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 01-07-2022 முதல் வழங்க வேண்டிய நான்கு சதவிகித அகவிலைப்படி உயர்வு பற்றி சிந்திக்கக் கூட மனமின்றி திமுக அரசு காலம் கடத்தி அரசு ஊழியர்களை மிகவும் வஞ்சித்து வருகிறது.

அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்

அதேபோன்று திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெரும் முறையினை தொடர்ந்து செயல்படுத்திடவேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன். திமுக தலைமையிலான அரசு, தமிழக அரசு ஊழியர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து வருவதை தமிழக அரசு ஊழியர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, திமுகவினர் இனியும் காலதாமதம் செய்யாது தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01-07- 2022 முதல் நான்கு சதவிகித அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவைத் தொகையினை உடனே வழங்கிடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

விடியல் ஆட்சி இல்லை! விடியா மூஞ்சி ஆட்சி! கொந்தளிப்பில் மக்கள்.. போறபோக்கில் உதயநிதியை விளாசிய டிடிவி..!

Follow Us:
Download App:
  • android
  • ios