Asianet News TamilAsianet News Tamil

நீங்க ஈவெரா கொள்கையை ஏற்பவராக இருந்தால் எமகண்ட நேரத்தில் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்.. உதயநிதியை சீண்டும் பாஜக.!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

narayanan thirupathy criticizes Udayanidhi
Author
First Published Dec 14, 2022, 6:43 AM IST

உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் ஈ.வெ.ரா கொள்கையை ஏற்பவராக இருந்தால் எமகண்டம், ராகுகாலத்தில் பதவியேற்கட்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி பதில் கொடுத்த டி.ஆர்.பி ராஜா

narayanan thirupathy criticizes Udayanidhi

இது குறித்து எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் ஈ.வெ.ரா கொள்கையை ஏற்பவராக இருந்தால் எமகண்டம், ராகுகாலத்தில் பதவியேற்கட்டும் என பாஜக கூறியுள்ளது. 

narayanan thirupathy criticizes Udayanidhi

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் ஈ.வெ.ரா கொள்கையை ஏற்பவராக இருந்தால், நாளை காலை 7:30-9:00 மணிக்குள் அல்லது மதியம் 12:1:30 மணிக்குள் அமை‌ச்ச‌ர் பத‌வியேற்கட்டும். இல்லையேல், ஈ.வெ.ரா கொள்கைகள் அழிந்து போயிற்று என ஒப்புக் கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  இது கூட ஒரு புது மாடலாக இருக்கலாம்... உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது பற்றி தமிழிசை விமர்சனம்!!

Follow Us:
Download App:
  • android
  • ios