Asianet News TamilAsianet News Tamil

"சொந்தங்களை விட என்னை நம்பி இருக்கும் கட்சியினரே முக்கியம்" உறவினர்கள் மத்தியில் உருகிய சசிகலா...

Sasikala emotional about her supporters
Sasikala emotional about her supporters
Author
First Published Mar 28, 2018, 4:56 PM IST


துரோகிகளுக்கு மத்தியில் ஆளும் கட்சியை உதறிவிட்டு நம் பின்னால் நிற்கும் நம்மை நம்பி வந்தவர்களுக்காக வாழ வேண்டும். அவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் சசிகலா கூறியுள்ளார்.

கணவர் நடராஜன் மரணம் அடைந்ததை தொடர்ந்து பெங்களூர் சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சை அருளானந்தா நகரில் வசித்து வருகிறார். நடராஜனுக்கு சொந்தமான அந்த வீட்டுக்கு இப்போதுதான் முதல் முறையாக நடராஜன் மறந்ததை அடுத்து தான் சசிகலா சென்றுள்ளார். அந்த வீட்டை நடராஜனின் தம்பி, அனைத்து அறைகளுக்கும் அழைத்துச் சென்று காட்டியுள்ளார். வீடு முழுக்க நடராஜன் சசிகலா ஒன்றாக போட்டோக்கள் மாட்டப்பட்டுள்ளதை கண்ட சசிகலா கண்கலங்கியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக சசிகலாவை அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் வந்து ஆறுதல் சொல்ல வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் மனம் விட்டுப் பேசிய சசிகலா, துரோகிகளுக்கு மத்தியில் ஆளும் கட்சியை உதறிவிட்டு நம் பின்னால் நிற்கும் நம்மை நம்பி வந்தவர்களுக்காக வாழ வேண்டும். அவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் சசிகலா கூறியுள்ளார். வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் பார்த்துவிட்டேன். இனி, எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்யாது என்றும் கூறியுள்ளார். சொந்தங்களை விட நம்மை நம்பி இருக்கும் கட்சியினரே முக்கியம் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பெங்களூர் சிறை வாழ்க்கை எப்படி இருக்கிறது? என சசிகலாவிடம் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த சசிகலா சிறையில் யோகா கற்றுக் கொள்கிறேன். நிறைய எழுதுகிறேன். அனைவரிடமும் நன்றாக பேசுவேன். இதனால் கன்னடா கற்றுக் கொள்ள முடிந்தது என தெரிவித்திருக்கிறார்.

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ஓராண்டுக்கு அசைவ உணவுகளை தவிர்த்துள்ளார். கணவர் இறந்திருப்பதால் இப்போதும் அசைவ உணவுகளை சாப்பிட மறுக்கிறார். இதனை அடுத்து வருகிற 30-ந்தேதி நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, திருமாவளவன், பாரதிராஜா உள்ளிட்டோரை அழைக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios