முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியதை அடுத்து சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சசிகலா வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இதில் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரனும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி சட்ட விரோதம் என்று உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மனுத்தாக்கல்

இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையின்போது பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை. கட்சியின் சின்னம் தங்களிடம் இருப்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இம்மாதம் 8ம் தேதி தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

பரபரப்பு தீர்ப்பு

இந்த மனு மீது நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கூறியுள்ளார். இதனையடுத்து, சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.