அதிமுகவில் இருப்பவர்கள் சசிகலாவை புறக்கணிக்க முடியாது. அதனால் ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளதாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சரஸ்வதி கூறியுள்ளார்

ராமநாதபுரத்தில் முதல்வர் வருகையையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகி கலந்துக்கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் முன்னாள் எம்.பி.யும், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச்செயலாளர் அன்வர்ராஜா கூறுகையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனை பொறுத்துதான் அரசியலின் தாக்கம் இருக்கும் என்றார். அதேபோல், அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அன்வர்ராஜாவின் இந்த கருத்து அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து  அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல வார இதழில்  பேட்டியளிக்கையில் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வர வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்குத்தான் தெரியும். அவர்தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு தான் நாங்கள் அதைப்பற்றி பேசுவோம். சிறையிலிருந்து அவர் வந்த பிறகு எடுக்கப்போகும் முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அன்வர் ராஜா சொல்லியிருக்கிறார். இப்போது பதிவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 95 சதவீதம் பேர் சசிகலாவால், டிடிவி தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். இதனை அவர்கள் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.

அதிமுகவில் ஜெயலலிதாவுடன் 34 வருடங்கள் பயணம் செய்திருக்கிறார் சசிகலா. கஷ்டப்பட்ட காலத்திலும் வெற்றி பெற்ற காலத்திலும் உடனிருந்தார். இது எல்லோருக்கும் தெரியும் சசிகலாடிவ அதிமுகவில் இருப்பவர்களால் புறக்கணிக்க முடியாது. ஆகையால் இப்போது ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.