MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சின்னம்மா தலைமையில் ‘புதிய அதிமுக’? டெல்டா சொந்தங்களை கொத்தாக வளைக்கும் சசிகலா - எடப்பாடிக்கு புதிய செக்!

சின்னம்மா தலைமையில் ‘புதிய அதிமுக’? டெல்டா சொந்தங்களை கொத்தாக வளைக்கும் சசிகலா - எடப்பாடிக்கு புதிய செக்!

அதிமுகவில் சசிகலா தனது அரசியல் ராஜதந்திரம் மூலம் டெல்டா மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெருக்கடியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது நகர்வுகள், அதிமுகவின் எதிர்கால அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 11 2026, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எடப்பாடிக்கு ஒரு புதிய 'செக்'
Image Credit : Asianet News

எடப்பாடிக்கு ஒரு புதிய 'செக்'

தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் கடந்த சில ஆண்டுகளாகவே தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி ஒருபுறம் இயங்கினாலும், 'சின்னம்மா' சசிகலாவின் திடீர் அரசியல் சுற்றுப்பயணங்களும், ரகசியத் திட்டங்களும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தனது கோட்டையான டெல்டா மாவட்டங்களில் அவர் மேற்கொண்டு வரும் நகர்வுகள், எடப்பாடிக்கு ஒரு புதிய 'செக்' வைத்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

24
டெல்டா பாசம்: சசிகலாவின் பலப்பரீட்சை
Image Credit : Asianet News

டெல்டா பாசம்: சசிகலாவின் பலப்பரீட்சை

சமீபகாலமாக சசிகலா மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்கள் வெறும் கண்துடைப்பு அல்ல என்பதை அவரது ஆதரவாளர்கள் நிரூபித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து வரும் சசிகலா, "கட்சியை மீட்டெடுப்பதே எனது ஒரே குறிக்கோள்" என்பதைத் திட்டவட்டமாகப் பேசி வருகிறார். எடப்பாடி அணியில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களை சசிகலா ரகசியமாகச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.டெல்டாவில் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட சமூக வாக்குகளை மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைப்பதன் மூலம், எடப்பாடியின் பிடியை அந்தப் பகுதியில் தளர்த்த சசிகலா முயல்கிறார்.

Related Articles

Related image1
விஜய பிரபாகரன் எனும் நான்.! முரசு முழங்க வருகிறது 'ஜூனியர் கேப்டன்' படை! தேமுதிகவின் புதிய போர்க்கள வியூகம்!
Related image2
TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!
34
எடப்பாடிக்கு புதிய நெருக்கடி
Image Credit : Asianet News

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி

தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சசிகலாவின் எழுச்சி அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வரப்போகும் தேர்தல்களைச் சந்திக்க ஒருங்கிணைந்த அதிமுக அவசியம் என்ற குரல் தொண்டர்களிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு 'புதிய அதிமுக' உருவாக வாய்ப்புள்ளதாக கூறும் அவரது ஆதரவாளர்கள் டெல்டாவை தன்வசப்படுத்தி, திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை வெற்றிவாகை சூட முடிவெடுத்துள்ளாராம். 

44
 அதிரடி ஆட்டம் ஆரம்பம்
Image Credit : our own

அதிரடி ஆட்டம் ஆரம்பம்

மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து களம் இறங்கினால், அது எடப்பாடியின் வாக்கு வங்கியை முழுமையாக சிதறடிக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கணக்கு. சசிகலாவின் இந்த 'டெல்டா பாசம்' வெறும் உணர்ச்சிகரமானது மட்டுமல்ல, அது எடப்பாடியின் அதிகார மையத்தை ஆட்டுவிக்கும் ஒரு அரசியல் கணக்கு என்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள். சசிகலாவின் இந்த அதிரடி ஆட்டம் அதிமுகவின் எதிர்காலத்தை மாற்றியமைக்குமா? அல்லது எடப்பாடி தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொள்வாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
எடப்பாடி பழனிசாமி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மொத்தமாக முடிச்சு விட்ட ஸ்டாலின்.. ராகுல் அதிருப்தி.. கதர்க்கட்சியை 'கை' விட்ட திமுக!
Recommended image2
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்... சக்தி வாய்ந்த நாடாக மாறும் இந்தியா..! பாகிஸ்தான் -சீனா ஆட்டம் க்ளோஸ்..!
Recommended image3
விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கவே கூடாது..! ஸ்டாலின் காங்கிரஸை விரட்டி அடிச்சிருக்கணும்..! சீமான் தடாலடி..!
Related Stories
Recommended image1
விஜய பிரபாகரன் எனும் நான்.! முரசு முழங்க வருகிறது 'ஜூனியர் கேப்டன்' படை! தேமுதிகவின் புதிய போர்க்கள வியூகம்!
Recommended image2
TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved