Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ், இபிஎஸ் இருக்கும் வரை சசிகலா கனவு ஒரு போதும் பலிக்காது.. அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி சரவெடி..!

தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டே ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்த சசிகலா தற்போது தொலைபேசி மூலம் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி அனுதாபத்தை பெற்று கட்சியை கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.

Sasikala attempt to capture the AIADMK.. ex-minister KC Veeramani
Author
Vellore, First Published Jun 17, 2021, 11:28 AM IST

அதிமுகவின் தோல்வியை பயன்படுத்தி, கட்சியை கைப்பற்ற சசிகலா முயல்வதாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோ அந்தக் கட்சிக்குள் ஆங்காங்கே அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதையடுத்து, சசிகலாவிடம் பேசிய நிர்வாகிகளை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கட்சியைவிட்டு நீக்கிவருகின்றனர். ஆனாலும், சசிகலா ஆடியோ தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆகையால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. 

Sasikala attempt to capture the AIADMK.. ex-minister KC Veeramani

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி;- அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி கட்சியை மெல்ல, மெல்ல கைப்பற்றிவிடலாம் என சசிகலா நினைக்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது. தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டே ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்த சசிகலா தற்போது தொலைபேசி மூலம் அதிமுக நிர்வாகிகளிடம் பேசி அனுதாபத்தை பெற்று கட்சியை கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.

Sasikala attempt to capture the AIADMK.. ex-minister KC Veeramani

அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரின் வழிகாட்டு தலின் பேரில் கட்சியை வலுவுடன் நடத்த தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, சசிகலாவின் எந்த திட்டமும் நிறைவேறாது. ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் அதிமுகவின் பாதுகாவலர்கள் என்றும் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios