மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு பக்கத்துலயே, பெரிய பங்களா ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இளவரசி உள்ளிட்ட்டோர் பெங்களூரு பாப்னஹர சிறையில் உள்ளனர். அவர்கள் நன்னடத்தை அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் விடுதலையாகலாம் என பலரும் கணித்துள்ளனர். ஆனால் அவர் இப்போதைக்கு வெளிவர மாட்டார். சிறையில் சொகுசாக லஞ்சம் கொடுத்ததற்காக அப்போதிய சிறைத்துறை அதிகாரியான ரூபா ஐபிஎஸ்தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால் சசிகலா ரிலிசாவதில் சிக்கல்கள் உள்ளது என்கிறார்கள்.

ஆனாலும் அவர் ரிலீசாவதற்கு முன்பே, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு அருகில் 20 கிரவுண் இடத்தில், ஒரு பெரிய பங்களா
உருவாகிக் கொண்டு இருக்கிறது. இடையில் வேதா இல்லத்தை நினைவிடமாக்கக்கூடாது என அவரது அண்ணன் மகன் தீப்க், தீபா ஆகியோர் வழக்குத் தொடர, ஆளும் கட்சி, நினைவிடமாக்கியே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதால், சசிகலா வந்து கேடால் அது தமக்கு கெட்ட பெயரை உருவாக்கி விடும். அதே நேரத்தில் தமக்கு ராசியான இடமான போயஸ் கார்டனில் வீடு அமைய வேண்டும் என சசிகலா கேட்டுக் கொண்டதால் அந்தப்பகுதியில் வீடு உருவாகி இருக்கிறது. 

சசிகலா ஜெயிலில் இருந்து நேராக வந்து, தலைக்கு குளித்து பழையபடி சபதம் எடுத்து இந்த பங்களாவில்தான் குடியேறப் போவதாகச் சொல்கிறார்கள். அதிமுகவினர் போயஸ் கார்டனை சுற்றி வருவார்களா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.