தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.144 தடை உத்தரவு இன்னும் அமலில் தான் இருக்கிறது.ஆனால் ஒரு சில தளர்வுகளுடன் தமிழகம் இயங்கி கொண்டிருக்கிறது.மதுரை எப்போதுமே வித்தியாசம் தான். போஸ்டர் அடித்தாலும் பேனர் வைத்தாலும் மதுரை மிஞ்ச முடியாது. மதுரையில் இருந்து புதுமைகள் தோன்றி வண்ணம் இருக்கும்.

பொதுமக்களும் அரசு சொன்ன விதிப்படி, கொரோனாவை தொற்றை தடுக்க கைகளை கழுவுவது, சேனிடைசர் பயன்படுத்துவது, முகக்கவசம் அணிவது என பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை பிரபல ஜவுளிக் கடையில் துணி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சேனிடைசர் கொடுக்க சேலை கட்டிய ரோபோவை பயன்படுத்தியுள்ளனர். கடையில் நிற்கும் வாடிக்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு சேனிடைசர் கொடுக்கும் விதமாக இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.மேலும் தானியங்கி (Automatic) சென்சார் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால், சேனிடைசர் இயந்திரத்தின் கீழ் கை  வைத்தால் அதிலிருந்து சேனிடைசர் வந்து விழும். இந்த முறையை தற்போது பெருமளவு பிரபல ஜவுளிக்கடைகள் உபயோகிக்க திட்டமிட்டுள்ளனர்.