sarath kumar condumn h.raja about kanimozhi tweet

கருணாநிதி மகள் கனிமொழி குறித்து மிகவும் கீழ்த்தரமாக டுவிட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நீ சரியான ஆம்பளையா இருந்தா என் குடும்பத்தைப் பத்தி தப்பா பேசிப்பார் என சீறியுள்ளார்.

"தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என கருணாநிதி குறித்தும் அவரது மகள் கனிமொழி குறித்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் குப்பைத் தொட்டிகளில் எச்.ராஜாவின் போஸ்டர்களை ஒட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எச்.ராஜா போன்ற தரம் கெட்ட அரசியல்வாதியைப் பார்த்ததில்லை என கூறினார். இவ்வளவு கீழ்த்தரமாக பேசும் எச்.ராஜா மீது பாஜக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஒருவேளை பாஜகவுத் தரம் தாழ்ந்துவிட்டதா? என வேதனை தெரிவித்தார். எச்.ராஜா அவரது குடும்பப் பெண்கள் குறித்து இப்படி பேசுவாரா ? என குற்றம்சாட்டிய சரத்குமார், நீ சரியான ஆம்பளையா இருந்தா என் குடும்பத்தைப் பற்றி பேசிப்பார் அப்பத் தெரியும் நான் யார் என்று என கூறினார்.

ராஜா நீ நாவை அடக்கிப் பேச வேண்டும் இல்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் சரத்குமார் கொதித்துப் போய் பேசினார்.

தான் எந்த ஒரு பிரச்சனைக்கும் இது போன்று கோபப்பட்டதில்லை என கூறிய சரத்குமார், ஒரு பெண்ணைக்குறித்து பேச பாஜக கொஞ்சம்கூட வெட்கப்படவில்லையே என தனது ஆதங்கத்தைத் கொட்டித் தீர்த்தார்.