Asianet News TamilAsianet News Tamil

அய்யோத்தியை விடாது விரட்டும் சன்னி... தீர்பில் திருப்தி இல்லை, மறு சீராய்வு மனு தொடுக்க திட்டம்..!!

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில்  தீர்ப்பு குறித்து  செய்தியாளர்களை சந்தித்த, சன்னி வக்பு வாரிய அமைப்பின்  வழக்கறிஞர்  ஜிலானி, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம், அதே நேரத்தில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யம்  திட்ட மிட்டு இருக்கிறோம் என தெரிவித்தார். 

sani waghbo bored announce for apple to  review petition at court on ayothi verdict
Author
Delhi, First Published Nov 9, 2019, 12:57 PM IST

அய்யோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதரடி தீர்ப்பு வழங்கி உள்ளது இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்ந்து மரிசீராய்வு மனு தாக்கல் செய்யப் படும் என்று சன்னி வக்பு வாரிய அமைப்பு தெரிவித்துள்ளது. 

sani waghbo bored announce for apple to  review petition at court on ayothi verdict

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி பகுதியில் சுமார் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன.இது தொடர்பாக ஆரம்பத்தில் பல ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

sani waghbo bored announce for apple to  review petition at court on ayothi verdict

அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் வொவ்ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதி குறித்து  இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை இறுதியில் வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது... இதனையடுத்து அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து,கடந்த  40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்திருந்தது. 

sani waghbo bored announce for apple to  review petition at court on ayothi verdict

இந்நிலையில்  இன்று 5  நீதிபதிகள் கொண்ட அமர் தீர்ப்பு வாசித்தனர்.  அதில், ஆயோத்தியில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டுள்ளது. மசூதிக்கு அடியில் உள்ள  கட்டிடம் இஸ்லாமிய கட்டிட முறையில் இல்லை, அது வேறொரு கட்டிடத்தின் முறையில்  உள்ளது. ஆனால் அது இந்து கோவில் கட்டிடம் என்று சொல்லுவதற்கும் தொல்லியல் துறையில் ஆதாரம் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நீண்ட கால இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்  சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவித்து.  அந்த  இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்டலாம் எனவும்,  அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அயோத்தியில் சுமார் 5 ஏக்கர் அளவிற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும்  உத்திரபிரதேச மாநில அரசுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. 

sani waghbo bored announce for apple to  review petition at court on ayothi verdict

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில்  தீர்ப்பு குறித்து  செய்தியாளர்களை சந்தித்த, சன்னி வக்பு வாரிய அமைப்பின்  வழக்கறிஞர்  ஜிலானி, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்,  அதே நேரத்தில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யம்  திட்ட மிட்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.  தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்ற அவர்,  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் அதே நேரத்தில்,  இந்த தீர்ப்பில் தங்களுக்கு முழு  திருப்தி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்சனை மேலும் நீடிக்கும் என தெரிகிறது. 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios