அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அவங்க இறங்கிட்டாங்க.. இது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல.. அலறும் திருமா.!

தமிழ்நாட்டில் சங் பரிவார் அமைப்பு வலிமை பெறுவது தீங்கு விளைவிக்கும். சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். 

Sangh Parivar organization exploits AIADMK weakness... Thirumavalavan

அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்ககளுக்கு பேட்டியளித்த தொல்.திருமாவளவன்;- அதிமுக பலவீனப்படுவது அக்கட்சிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவின் பலவீனத்தை சங்பரிவார் அமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் சங் பரிவார் அமைப்பு வலிமை பெறுவது தீங்கு விளைவிக்கும். சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். 

இதையும் படிங்க;- அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

Sangh Parivar organization exploits AIADMK weakness... Thirumavalavan

தமிழ்நாட்டை மனதில் வைத்தே அவ்வாறு பேசியிருக்கிறார். இத்தனை ஆண்டு காலமாக தமிழகத்தில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனாலும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். மதத்தின் பெயரால் பகைமையை வளர்க்கிறார்கள். வெறுப்பு அரசியலை திட்டமிட்டு பரப்பி கொண்டே இருக்கிறார்கள். 

இதையும் படிங்க;-  தமிழக ஆளுநர் சர்ச்சை கிளப்புவதை பொழப்பாக வைத்திருக்கிறார்.. போட்டு தாக்கும் டி.ஆர். பாலு..!

Sangh Parivar organization exploits AIADMK weakness... Thirumavalavan

வட இந்திய மாநிலங்களில் இவையெல்லாம் முன்னெடுத்த நிலையில், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திட்டமிட்டு இவற்றை செயல்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்த சூழலில் அதிமுக பிளவுப்படுவது நல்லதல்ல. இதனை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் தலைவர்களுக்காக நான் சொல்லவில்லை. தொண்டர்களுக்காக சொல்கிறேன் என்று  திருமாவளவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க;-  ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்.. சங்பரிவார்களுக்கு ஒரு எச்சரிக்கை.. திருமாவளவன் திகுதிகு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios