Asianet News TamilAsianet News Tamil

அணையில் தண்ணீர் தேங்கியும் தொடரும் மணல் கொள்ளை..!! கிருஷ்ணகிரியில் அரசியல் புள்ளிகள் அட்டூழியம்..!!

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான முறையில் பள்ளி கல்லூரி மாணவர்களை வைத்து மணல் திருடும் கும்பலை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Sand looting continues as water stagnates in the dam, Political points atrocity in Krishnagiri
Author
Chennai, First Published Jul 27, 2020, 12:34 PM IST

கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான முறையில் பள்ளி கல்லூரி மாணவர்களை வைத்து மணல் திருடும் கும்பலை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த நெடுங்கல் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் அதிக அளவில் மணல் தேங்குகிறது. தண்ணீர் குறையும்போது ஆற்றில் உள்ள மணலை ஆற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களான நெடுங்கல் மற்றும் ஜெயின் ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருடி விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Sand looting continues as water stagnates in the dam, Political points atrocity in Krishnagiri

இன்று காலை கேஆர்பி அணையிலிருந்து வினாடிக்கு 967 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது நெடுங்கல் தடுப்பணையில் வந்து தேங்கி நிற்கிறது. அணையில் நீர் தேங்கி உள்ளதால், 10 அடி ஆழத்திற்கு கீழ் மணல் உள்ளது.கொரோனாவினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கி மணல் திருட்டில் வயதானவர்கள் ஈடுபடமுடியாது என்பதால் .பணத்தாசை கொண்ட மணல் கடத்தல் பேர்வழிகள் விடுமுறையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பணத்தாசை காட்டி தண்ணீரில் மூழ்கி ஆபத்தான முறையில் மணல் திருட்டில் ஈடுபட வைக்கின்றனர். மாணவர்களின் உயிரை பணையம் வைத்து லாரி டியூப்களில் காற்று நிரப்பி அதன் மீது பிளாஸ்டிக் பைகள் போட்டு குழிபோன்று அமைக்கின்றனர். பின்னர் அதனை ஆற்றின் நடு பகுதிக்கு எடுத்து சென்று 10 அடி ஆழத்திற்கு கீழ் உள்ள மணலை வானலி உதவுயுடன் தண்ணீரில் மூழ்கி மணலை எடுத்து டியூப்பில் நிரப்புகின்றனர். 

Sand looting continues as water stagnates in the dam, Political points atrocity in Krishnagiri
டியூப்பில் மணல் நிரம்பியதும் அதனை கரைக்கு எடுத்து வந்து அங்கு வைத்துள்ள மணல் சல்லடையில் சலிக்கின்றனர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் சிமெண்ட் மூட்டை போல் கட்டி எடுத்து வந்து தனி இடத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அரசியல்வாதிகள் நாள்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றனர். மணல் கடத்தலுக்கு போலீசாரும், வருவாய்த்துறையினரும் உடந்தையாக உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த இந்த தடுப்பணை மணல் கடத்தல்காரர்களால் ஏற்கனவே இந்நிலையில் உள்ளது. தற்போது அணையை ஒட்டி உள்ள மணலை சட்டவிரோதமாக கடத்தி செல்வதால் அணையின் ஸ்திரத்தனைமை கேள்விக்குறியாகி உள்ளது .மாவட்ட நிர்வாகம் உடனடியாக மணல் திருட்டை தடுத்து பழமை வாய்ந்த தடுப்பணையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios