நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல் பணிகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தார். அதிமுகவில் அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் சின்னம்மா என்று அழைத்து சசிகலா தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது நாஞ்சில் சம்பத் ஒதுங்கியே இருந்தார்.

சசிகலாவை பேட்டிகளில் விமர்சிக்கவும் செய்தார். அதிமுகவில் தான் இணைந்தபோது தனக்கு மறைந்த முதல்வர் அளித்த இன்னோவா காரை திடீரென அதிமுக தலைமை கழகத்தில் திரும்ப ஒப்படைத்தார்.