தமிழகத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று திராவிட கழகமும், திமுகவும் இணக்கமாக உள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சேலத்தில் திராவிடர் கழக 75-வது ஆண்டு பவள விழா மாநாட்டின் தொடக்க விழா சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மொழியால் வேறுபட்டு இருந்தாலும் திராவிடர் என்ற இனத்தால் ஒன்று பட்டுள்ளோம் என்றார். பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள் நேர்மையான எதிரிகள். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள எதிரிகள் சூழ்ச்சிகளைக் கையாளும் எதிரிகளாக உள்ளனர். 

எந்த விலையும் கொடுத்து சாதியை ஒழித்து புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். அடக்குமுறைகளைச் சந்தித்து சிறைக்குச் செல்ல திராவிடர் கழகத்தினர் எப்போதும் தயாராக இருக்கிறோம். 

 

திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றது. திமுக அரசியலை பார்த்துக் கொள்ளும். திராவிடர் கழகம் அதற்கு பாதுகாப்பாக அணியை உருவாக்கி பாதுகாக்கும். எந்த விலையும் கொடுத்து ஜாதியை ஒழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கூறினார்.