Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !! எடப்பாடி அதிரடி !!

தமிழக அரசு ஊழிய்களுக்கு 2 சதவீத அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

salary increased for tn govt employees
Author
Chennai, First Published Sep 17, 2018, 7:06 PM IST

அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விரைவில் இரு குறித்து முடிவு எடுக்கப்படும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்க 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும்  அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

salary increased for tn govt employees

அதன்படிஅரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்களும்,  ஓய்வூதியதார்களுள் பயன்பெறுவார்கள். இதன் மூலம்  தமிழக அரசுக்கு 1157 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

salary increased for tn govt employees

ஓய்வூதியதாரர்களுக்கு  154 முதல் 2250 ரூபாய் வரையும், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு துரடல 2018 முதல் ஆகஸ்ட் வரை நிலுவையாகவும், அதன் பிறகு சம்பளத்துடனும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios