Asianet News TamilAsianet News Tamil

தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாக மலையேறிய ரஹானா.. அய்யப்பனை அசட்டை பண்ணுகிறாரா ? பக்தர்கள் கொந்தளிப்பு…

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என  பக்தர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், இன்று மலையேற முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோர் தான் அவர்கள் என தெரிந்ததும் பக்தர்கள் கொந்தளித்துப் போயினர்.

sabarimalai rahana fathima  went to temple issue
Author
Sabarimala, First Published Oct 19, 2018, 11:06 AM IST

அதுவும் ரஹானா ஃபாத்திமா கொஞ்சம் கூட பக்தி பயமின்றி ஜாலியாக தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டே கோவிலுக்குள் நுழைய முயன்றது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 
sabarimalai rahana fathima  went to temple issue

இதையடுத்து நேற்று முன்தினம்  சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்  கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா  ஆகிய இருவரும் இன்று கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு சபரிமலை சென்றனர். அவர்கள் விரதம் எதுவும் இருக்கவில்லை என்றும் கோவிலுக்குள் உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சபரி மலைக்கு வந்திருந்தனர்.

sabarimalai rahana fathima  went to temple issue

அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்தனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது என கேரள அரசு உத்தவிட்டது. மேலும்  சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் எனவும்  கேரள அரசு கண்டிப்புடன் தெரிவித்தது. இதையடுத்து பக்தர்கள் அமைதியடைந்தனர்.

இந்நிலையில் ஃபாத்திமா ரஹானா அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விரதம் ஏதும் இருக்காமல் அவர்  இருமுடி கட்டிக் கொண்டு வந்தது அய்யப்ப பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

sabarimalai rahana fathima  went to temple issue

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜாலியாக தர்பூசணி  பழம் சாப்பிட்டுக் கொண்டு, கோவிலுக்கும், சாமிக்கும் எந்த மரியாதையும் கொடுக்காமல் அவர் வந்ததுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்கள் இருவரும்  வம்புக்காகவே சபரிமலைக்கு வந்ததாகவே பக்தர்கள் கூறுகின்றனர். இதனிடையே பத்திரிக்கையாளர் கவிதா மற்றும்

பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகியோருக்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios