sabari malai aiyappa swamy temple name likely to be change

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என மாற்றுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அப்போது தேவசம் போர்டின் தலைவராக இருந்த பிரேயர் பாலகிருஷ்ணன், கோவிலின் பெயரை ஐயப்ப சுவாமி கோவில் என மாற்றி கூறினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, சபரிமலை கோவிலின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், ஐயப்ப சுவாமி கோவில் என்ற பெயரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் என மீண்டும் மாற்றியமைக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.