மறைமுக தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் இதுவரை அதிமுக 9 மாவட்டங்களையும் திமுக 9 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவர் பதவியில் 314 இடங்களில் இதுவரை அதிமுக 7 பதவிகளையும், திமுக 5 இடங்களிலும் வென்றுள்ளது. 

தஞ்சாவூர் ​மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவின் பிரீத்தா வெற்றி பெற்றுள்ளார். கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக வை சேர்ந்த சண்முக வடிவேல் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மதுரையில் 12-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிக உறுப்பினர் இருந்தும் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரண்யா (28) காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்தில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது . ஒரு தரப்பு திமுக கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.