தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் நிதி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வைகோ ரூ. 25 கோடியை வசூலிக்க தனது கட்சியினருக்கு டார்கெட் வைத்துள்ளாராம்.

 

ம.தி.மு.க மாவட்டச் செயலர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் வைகோ தலைமையில், சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ 'ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தேர்தல் நிதி வசூலிக்க, தனித்தனியே இவ்வளவு தொகை என வரையறை செய்யவில்லை. இருப்பினும், குறைந்தபட்சம், மாவட்டத்திற்கு 50 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம்.

நமக்கு செல்வாக்குள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, தூத்துக்குடியில் இன்னும் அதிகம் கூட வசூலிக்கலாம் என அந்தப் பகுதி நிர்வாகிகள் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்’’ எனக் கூறி இருக்கிறார் வைகோ. ம.தி.மு.க.,வில், 50 மாவட்டங்களாக கட்சியை பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

அப்படியானால், 25 கோடி ரூபாய் வசூல் செய்யவேண்டுமா..? கட்சிக்கு இருக்கும் மதிப்பில் இந்தத் தொகையை வசூலிக்க முடியுமா? என அனைத்து நிர்வாகிகளும் கலக்கத்துடனே ஊர் போய் சேர்ந்திருக்கிறார்கள்.